நடிகர் விஜய் வாரிசு படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடித்து வரும் விஜய்67 படத்தின் டைட்டில் மற்றும், புரொமோ வீடியோ நேற்று மாலை 5 மணிக்கு வெளியாகி வைரலானது.
வித்தியாசமான முறையில் அமைந்த இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த புரொமோ வீடியோ வெளியான 24 மணி நேரத்தில் 27 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ தெரிவித்துள்ளது.