தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜமீன் பரம்பரை பெண்ணை நடிகர் காளிதாஸ் ஜெயராமன் இன்று திருமணம் செய்து கொண்ட நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
மலையாள நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் விக்ரம், ராயன் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் காளிதாஸ் ஜெயராமனுக்கு தாரணி காளிங்கராயர் என்பவருக்கும் இன்று கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் திருமணம் நடந்தது.
இந்த திருமணத்திற்கு மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டதாக தெரிகிறது. நடிகர் காளிதாசை திருமணம் செய்து கொண்ட தாரணி காளிங்கராயர் ஊத்துக்குளி ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர் என்பதும் மாடல் அழகி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் காளிதாஸ் ஜெயராம் - தாரணி காளிங்கராயர் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதில் அரசியல்வாதிகள் திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.