பெண்களுக்கு திருமணம் தடையாக இருந்தால் கூடாரவல்லி நாளில் பெருமாள் கோவிலுக்கு சென்று திருப்பாவை 27வது பாசுரத்தை பாட வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
மார்கழி மாதம் 27வது நாள் ஆண்டாள் தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள், காரணம் அன்றுதான் ஆண்டாள் தான் விரதத்தை பூர்த்தி செய்த நாள் என்று கூறப்படுகிறது. இந்த நாளை தான் கூடாரவல்லி நாள் என்று கூறுகிறார்கள்.
திருமணம் தள்ளிக் கொண்டே வரும் பெண்கள் இந்த கூடாரவல்லி நாளில் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்குள்ள ஆண்டாள் சன்னதியில் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்ற திருப்பாவை 27வது பாசுரத்தை பாட வேண்டும்.
அவ்வாறு வழக்கமாக பாடிக்கொண்டே இருந்தால் கண்டிப்பாக திருமணம் விரைவில் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.