நான் இறந்துவிட்டேனா? நலமாக உள்ளேன்: நடிகர் ஜெயராம் மறுப்பு
புதன், 5 செப்டம்பர் 2018 (16:31 IST)
நடிகர் ஜெயராம் ஜீப் விபத்துக்குள்ளாகு வீடியோ வைரலானதை தொடர்ந்து அவர் இறந்துவிட்டதாக செய்தி பரவி வருகிறது.
மலையாள நடிகர் ஜெயராம் மலை பகுதி ஓன்றில் அவரது ஜீப் விபத்துள்ளாகும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த விபத்தில் அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் பரவ தொடங்கியது.
இந்நிலையில் ஜெயராம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதாவது, ஜீப் விபத்துள்ளாகும் வீடியோ ஒருமாதத்துக்கு முன் தாய்லாந்தில் நடந்தது. நான் அந்த ஜீப்பை இயக்கவில்லை. நான் நலமாக இருக்கிறேன். இதுபோன்ற வதந்திகளை நம்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.