மலையாள சினிமாவில் கடந்த 23 ஆம் தேதி வெளியான படம் காதல் தி கோர். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் மம்முட்டி, ஜோதிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜியோ பேபி இப்படத்தை இயக்கியிருந்தார். மேத்யூ புலிக்கன் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், ரசிகர்களிடமும், சினிமாத்துறையினர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளள காதல் தி கோர் படத்திற்கு கேரளாவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கேரளம் கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்த அமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், காதல் தி கோர் படம் கிறிஸ்துவ உணர்வுகளுக்கு எதிராக உள்ளது,. தன்பாலின காட்சிப்படுத்த கத்தோலிக்க கிறிஸ்தவ நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளது.