சூப்பர் ஸ்டாருடன் இணையும் சிவகார்த்திகேயன்?

திங்கள், 27 நவம்பர் 2023 (20:38 IST)
ஜெயிலர் வெற்றிக்குப் பின்னர் ரஜினிகாந்த் தலைவர் 170 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
இதையடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இடம்பெறாது என சமீபத்தில் லோகேஷ் ஒரு நேர்கணலில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் எனவும் கூறியிருந்தார்
 
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகரும் பிரபல நடிகருமான சிவகார்த்திகேயன் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகிறது.

ரஜினியின் ரசிககரான சிவகார்த்திகேயன் அவருடன் இணைந்து நடிப்பதால் இப்படத்திற்கு  பெரும் ஆர்வம் ஏற்படுத்தியுள்ளதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்