என் இளவரசிக்கு பிறந்தநாள்... காதலோடு வாழ்த்திய ஜெயம் ரவி!

சனி, 15 ஏப்ரல் 2023 (14:51 IST)
வாரிசு நடிகராக இருந்தாலும் திறமையால் உச்சத்தை திட்டவர் நடிகர் ஜெயம் ரவி. இவர்  ஜெயம் படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படமே மெகா ஹிட் அடித்து காலம் பேசும் திரைப்படமாக அமைந்தது. 
 
அதன் பிறகு மழை , தனி ஒருவன் , ரோமியோ ஜூலியட் , எங்கேயும் காதல்,  தாம் தூம், சந்தோஷ் சுப்பிரமணியம் என பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
இந்நிலையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளுக்கு அவரின் அழகான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் ராணி , என் தோழி என்றென்றும் நீடூழி வாழ்க என பதிவிட்டு வாழ்த்தியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்