காதலர் தினத்தில் நடிகை குஷ்புவிடம் ஆசி பெற்ற ஜெயம்ரவி!

செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (12:35 IST)
ஜெயம் ரவி மனைவியுடன் சென்று நடிகை குஷ்புவிடம் ஆசீர்வாதம் பெற்றார்!
 
தமிழ் சினிமாவின் சிறந்த காதல் ஜோடியான ஜெயம்ரவி - ஆர்த்தி ஜெயம் ரவி தம்பதி ஜெயம் படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் திரைப்படமே மெகா ஹிட் அடித்து காலம் பேசும் திரைப்படமாக அமைந்தது. 
 
அதையடுத்து, மழை, எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்,  சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தாம் தூம், எங்கேயும் காதல் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். 
இவர் கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று காதலர் தினத்தில் நடிகை குஷ்புவை மனைவியுடன் சென்று சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார். 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்