ரவி மோகனை பிரிந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்றால், தனக்கு மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வேண்டும் என நீதிமன்றத்தில் ஆர்த்தி ரவி மனு தாக்கல் செய்தது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தன்னை பணம் சம்பாதிக்கும் மிஷினாக தனது மனைவியும் மாமியாரும் பயன்படுத்திக்கொண்டதாக ரவி மோகன் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையிலேயே தற்போது விவாகரத்துக்கு பெற்று பிரியும் போது கூட, பணத்தின் மீதே ஆர்த்தி ரவிக்கு கண் இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அப்படி என்றால், ரவி மோகன் கூறிய குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மைதானா என்கிற கேள்வியும் எழுந்து வருகிறது. உண்மையாகவே ஆர்த்தி ரவி நல்லவராக இருந்திருந்தால், நடிகை சமந்தா போல், "ஒரு ரூபாய் கூட ஜீவனாம்சம் வேண்டாம்" என்று சொல்லியிருப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனால் அவர் மாதம் 40 லட்சம் கேட்கிறார் என்றால், வருடத்திற்கு ரூ. 4.8 கோடி, 10 வருடத்திற்கு ரூ. 48 கோடி என்பது பொருள். எனவே, விவாகரத்திலும் கூட சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமே ஆர்த்தி ரவிக்கு உள்ளது என ட்ரோல்கள் அதிகரித்து வருகின்றன. இது சமூகவலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.