ஆரவ்-ஓவியா, ரசிகர்களை குஷிபடுத்தும் செய்தி

வியாழன், 13 டிசம்பர் 2018 (16:47 IST)
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் 1 நிகழ்ச்சியை நடிகர் கமல்  தொகுத்து வழங்கினார். இந்த சீசனில் பங்கேற்ற ஓவியா, ஆரவ், ஜுலி, கஞ்சா கருப்பு, காயத்ரி ரகுராம், சினேகன், சுஜா வருணி உள்பட பலரும் மிக எதார்த்தமாக இருந்தனர். 
யாரும் நடிக்கவில்லை. இதில் காதல், சண்டை, கலகலப்பு என அற்புதமாக இருந்தது. அதிலும் குறிப்பாக ஓவியா- ஆரவ் காதல் விவகாரம்,  மருத்துவ முத்தம் ரெம்பவே பிரபலம். ஓவியா இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஆரவின் நெருங்கி தோழியாக மாறினார். 
 
இருவரும் ஏதேனும் ஒரு படத்தில் நடிப்பார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அது இப்போது நடந்துவிட்டது, ஆரவ் நடிக்கும் ஒரு படத்தில்  ஓவியா நடித்துள்ளாராம். அதுவும் சிறப்பு வேடத்தில் கண்டிப்பாக ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியாக இருக்கும் என ஆரவ் டுவிட்டரில்  பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்