பகத் பாசில்- சாய் பல்லவி ஜோடி சேரும் புதிய படம்!

திங்கள், 19 நவம்பர் 2018 (15:10 IST)
பிரேமம் படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் சாய் பல்லவி. மலையாளத்தில் வெளியான இந்த படத்தின் மூலம் கேரள ரசிகர்களின் மனங்களை வெகுவாக கொள்ளையடித்தார் சாய் பல்லவி. 
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் செலக்டிவான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழில் தனுஷ் உடன் மாரி 2,  சூர்யாவுடன் என்ஜிகே, ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிறிய இடைவேளைக்கு பிறகு மலையாள சினிமா உலகுக்கு சாய் பல்லவி திரும்பியுள்ளார்.  
 
அவர் பகத் பாசிலுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை விவேக் இயக்குகிறார். பிஎப் மேத்ஸ்  கதை எழுதியுள்ளார். பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடக்கிறது.
 
அதுல் குல்கர்னி, பிரகாஷ் ராஜ்,  சுரபி, சுதேவ் நாயர்,  ரெஞ்சி பனிகர், மற்றும் லினா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். 
 
சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்சன் மற்றும் ரொமாண்டிக் திரில்லர் படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. சாய் பல்லவி கடைசியாக துல்கர் சல்மானுக்கு ஜோடியாக காளி படத்தில் நடித்திருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்