அஜித் பட தயாரிப்பாளர் திடீர் மரணம் -பிரபலங்கள் இரங்கல்!

Webdunia
புதன், 4 செப்டம்பர் 2019 (18:31 IST)
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஸ்ரீராம் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 


 
தமிழ் சினிமாவின் மிக சிறந்த இயக்குனர்களில் ஒருவரான மணிரத்தினத்தின் நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான ஸ்ரீராம் இன்றைய பல முன்னணி நடிகர்களின் ஆரம்பகால வெற்றிக்கு வழிவகுத்தவர். 
 
தனது நண்பர் மணிரத்தினத்துடன் சேர்த்து ஆலயம் என்று தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி அதில் முதன்முதலாக விஜயகாந்தின் சத்திரியன் படத்தை தயாரித்தார். பின்னர் அரவிந்த்சாமியின் பாம்பே, விக்ரமின்  சாமுராய் , திருடா திருடி உள்ளிட்ட வெற்றிப்படத்தை தயாரித்த இவர் தான் அஜித்தின் ஆரம்பகால வெற்றி படங்களில் ஒன்றான "ஆசை" படத்தையும் தயாரித்துள்ளார். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்த இவர் அதற்கு ஈடாக  தொழிலில் பெரும் நஷடத்தையும்  சந்தித்துள்ளார். 
 
இந்நிலையில் 60 வயதான ஸ்ரீராம்  சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில்,  இன்று மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்துள்ளார். அவரது இறப்பிற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்களை தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்