இளையராஜா இசையில் ஆதி நடித்த கிளாப்… நேரடி ஓடிடி வெளியீடு!

வியாழன், 10 பிப்ரவரி 2022 (10:53 IST)
ஆதி நடித்துள்ள கிளாப் படத்தின் நேரடி ரிலீஸ் உரிமையை சோனி லிவ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

நடிகர் ஆதி நடிக்கும் படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலிஸ் ஆகி வருகின்றன. அந்த வகையில் அவர் நடித்துள்ள படம்தான் கிளாப். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஆதியுடன் ஆகான்ஷா சிங், பிரகாஷ் ராஜ், மைம் கோபி, முனிஷ்காந்த் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்த படத்தை பிரித்வி ஆதித்யா இயக்கியுள்ளார். இந்த படம் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை லகரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் நேரடி ஓடிடி உரிமையை சோனி லிவ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்