ரிஷப் பண்ட்தான் எதிர்கால தொடக்க வீரரா? ரோஹித் ஷர்மா பதில்!

வியாழன், 10 பிப்ரவரி 2022 (10:45 IST)
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நேற்று ரிஷப் பண்ட் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியது அனைவருக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

இந்திய அணியில் ஒரு நாள் போட்டிகளில் தொடக்க ஜோடிக்கான குழப்பம் சில மாதங்களாக நீடித்து வருகிறது. ஷிகார் தவான் ரோஹித் சர்மா ஜோடிதான் உலகக்கோப்பை வரை களமிறங்கும் என்பது தெரிந்ததுதான். ஆனால் தவான் அல்லது ரோஹித் இல்லாத போதோ அல்லது அவர்களுக்கு பிறகோ யார் யார் தொடக்க வீரர்கள் என்பதில் குழப்பம் உள்ளது.

அந்த இடத்துக்காக கே எல் ராகுல், ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், மயங்க் அகர்வால் மற்றும் பிருத்வி ஷா ஆகியோர் வரிசையில் நிற்கின்றனர். இந்நிலையில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட்டை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினார். ஆனால் மோசமாக விளையாடி 18 ரன்கள் மட்டுமே சேர்த்து அவுட் ஆனார்.

இந்நிலையில் இந்த பரிசோதனை முயற்சி குறித்து பேசியுள்ள ரோஹித் ‘இது தற்காலிகமான ஒரு பரிசோதனை முயற்சிதான். தவான் வந்ததும் அவரே ஆட்டத்தைத் தொடங்குவார். அதுவே நிரந்தரம்.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்