காதலுக்கு மரியாதை… கஸ்தூரியின் நக்கல் ட்வீட்டுக்கு ரஹ்மானின் எளிய பதில்!

வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (07:36 IST)
தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான ஏ ஆர் ரஹ்மான் இந்திய சினிமா தாண்டியும் ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். ஆனால் தற்போது அதிக அளவில் தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது மாமன்னன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், வரிசையாக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் மனைவியுடன் பங்கேற்றார் ரஹ்மான். அப்போது அவரின் மனைவி சாய்ரா பானு பேச ஆரம்பித்த போது ‘இந்தில பேசாதீங்க… தமிழ்ல பேசுங்க’ என சொல்ல அரங்கம் ஆரவாரித்தது.

இதைக் குறிப்பிட்டு நடிகை கஸ்தூரி “என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன ? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க?” என நக்கலாக பதிவிட்டு இருந்தார். இந்த ட்வீட்டை பகிர்ந்த ஏ ஆர் ரஹ்மான் “காதலுக்கு மரியாதை” என ஒரே வாக்கியத்தில் முடித்து விட்டார். இந்த ட்வீட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்