'தல 59' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்?

திங்கள், 29 அக்டோபர் 2018 (21:44 IST)
தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கவுள்ளவர் 'சதுரங்க வேட்டை' எச்.வினோத் என்பதும் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் முன்னணி ஊடகம் ஒன்று, இந்த படத்திற்கான ஒப்பந்தத்தில் இன்று அஜித் கையெழுத்திட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானை அணுகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜித், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி கடைசியாக இணைந்த படம் 'வரலாறு'. 2006ஆம் ஆண்டு இந்த படம் வெளியானதை அடுத்து 12 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த ஜோடி இணையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தீபாவளி கழித்து அறிவிக்கப்படும் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கி தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்