நயன்தாரா தோழியை பாராட்டிய தல அஜித்

திங்கள், 29 அக்டோபர் 2018 (20:50 IST)
தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'விஸ்வாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டிய நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. தெரியாத விஷயம் நயன்தாராவுக்கு தோழியாக கொல்கத்தாவை சேர்ந்த பாப்ரிகோஷ் என்பவர் நடித்துள்ளார் என்பதே. இவர் படப்பிடிப்பின்போது தமிழை திணறி திணறி பேசினாலும் அவருக்கு ஊக்கம் கொடுத்து அவரது நடிப்பை அஜித் பாராட்டியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் தான் தல அஜித்தின் மிகப்பெரிய ரசிகை என்றும் பாப்ரிகோஷ் கூறியுள்ளார். இந்த படம் வெளிவந்த பின்னர் இவருக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்