ரிலீஸே ஆகாத படத்திற்கு டிக்கெட் விற்ற பிரபல நடிகர்: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (09:34 IST)
ரிலீஸே ஆகாத படத்திற்கு டிக்கெட் விற்ற பிரபல நடிகர்
இன்னும் ரிலீஸே ஆகாத படத்தின் டிக்கெட்டை 6 லட்சம் ரூபாய் விற்பனை செய்து மோசடி செய்ததாக நடிகர் ஆர்.கே. மீது ஒருவர் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
எல்லாம் அவன் செயல், அழகர் மலை, ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஆர்கே. இவர் தற்போது ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் 600 டிக்கெட்டுகளை, தலா 1000 ரூபாய்க்கு மொத்தமாக ரூ.6 லட்சத்திற்கு தன்னிடம் விற்பனை செய்து மோசடி செய்ததாக திருப்பூர் காவல் கண்காணிப்பாளரிடம் கோவிந்தராஜ் என்பவர் புகார் அளித்துள்ளார்.
 
ரிலீஸே ஆகாத படத்தின் டிக்கெட்டுக்களை தன்னிடம் 6 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த ஆர்கே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவிந்தராஜ் காவல்துறையினர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
ஆனால் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நடிகர் ஆர்.கே. தன் மீது புகார் தெரிவித்துள்ள நபரை தனக்கு தெரியாது என்றும் லோக்கல் வினியோகஸ்தருடனான பிரச்சனையில் தன்னை தேவையில்லாமல் இழுத்து விட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த புகாரின் உண்மைத் தன்மை குறித்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்