இந்நிலையில் மராட்டிய மாநில அமைச்சர் பிரகாஷ் மேத்தாவின் முன்னாள் உதவியாளர் சச்சின் பவார் மற்றும் டி.வி. நடிகையும் மாடல் அழகியுமான டிவோலினா பட்டாச்சார்ஜி உள்பட மேலும் 3 பேருக்கும் ராஜேஸ்வர் கொலையில் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை பிடித்து வந்து காட்கோபர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக 3 மணிநேரம் விசாரணை நடத்தி பின்னர் கைது செய்தனர்.