மிஸ்டர் லோக்கலில் 5 நாயகர்கள் – தனது ஸ்டலை விடாத ராஜேஷ் !

Webdunia
செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (15:33 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் மே 1 ஆம் தேதி வெளியாக இருக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தில் ராஜேஷ் படத்தில் இதுவரை நடித்த 5 கதாநாயகர்களும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளனர்.

சீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் மிஸ்டர் லோக்கல். இந்தப் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ராதிகா, சதிஷ், தம்பி ராமையா, எரும சாணி ஹரிஜா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

மே 1 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஒரு பாடல் மற்றும் டீசர் ஆகியவை ஏற்கனவே வெளியாகியுள்ளன. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஏப்ரல் 20 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதையடுத்து படத்தை பற்றிய ஒரு முக்கியமானத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ராஜேஷின் படங்களில் எப்போது க்ளைமேக்ஸுக்கு முன்னால் எதாவது ஒரு ஹீரோ சிறப்புத் தோற்றத்தில் தோன்றி நடிப்பார். இதைத் தனது ஸ்டைலாகவே அவர் வைத்துள்ளார். அதேப் போல மிஸ்டர் லோகல் படத்தில் இதுவரை அவர் படத்தில் நடித்த ஜீவா, ஆர்யா, கார்த்தி, ஜி வி பிரகாஷ், உதயநிதி ஸ்டாலின் ஆகிய 5 ஹீரோக்களும் நடிக்க இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்