46yearsofrajinism காமன் டிபி ரிலீஸ்..பிரபல நடிகைகள் புகழாரம்

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (21:45 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 46 ஆண்டுகள் ஆகிறது இதைச் சிறப்பிக்கும் வகையில்  இன்று மாலை #46YearsRajinismCCP காமன் டிபி வெளியாகியுள்ளது.
 

தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் பாலச்சந்தரால் அறிமுகம் செய்யப்பட்டவர் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் வெளியான புவனா ஒரு கேள்விக்குறி,

தில்லு முல்லு உள்ளிட்ட படங்களில் முத்திரை பதித்தார். அடுத்து பாரதிராஜா, மகேந்திரன் உள்ளிட்டமுன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து தன் நடிப்புத் திறமையை நிரூபித்தார்.

தொடர்ந்து, தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில்  ஆக்சன் ஹீரோவாக தன் 70 வயதிலும் அசத்தி வரும் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமாகி 46 ஆண்டுகள் ஆகிறது. எனவே இதைச் சிறப்பாகக் கொண்டாட ரஜினி ரசிகர்கள் முடிவெத்துள்ளனர். அதனால் வரும் ஆகஸ்ட் 13  ஆம்தேதி மாலை 6 மணிக்கு 46yearsof rajiniyisam என்ற காமன் டிபிஐ வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்தபடி இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த காமன் டிபிஐ தங்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு சினிமா நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, நடிகை தன்ஷிகா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சகாப்தம்,அவர் தினமு கற்றுக்கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

 மேலும் நடிகை சாக்‌ஷி அகர்வால்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல லட்சம் பேருக்கு இன்ஸ்பிரேசன். ஏனென்றால் அவர் இந்திய சினிமாவில் புரசி செய்தவர் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்