46 ஆம் ஆண்டு ரஜினியிஷம் … காமன் டிபி ரிலீஸ்…வைரல்

செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (22:49 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 46 ஆண்டுகள் ஆகிறது இதைச் சிறப்பிக்கும் வகையில்  இன்று மாலை #46YearsRajinismCCP காமன் டிபி வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் பாலச்சந்தரால் அறிமுகம் செய்யப்பட்டவர் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் வெளியான புவனா ஒரு கேள்விக்குறி,

தில்லு முல்லு உள்ளிட்ட படங்களில் முத்திரை பதித்தார். அடுத்து பாரதிராஜா, மகேந்திரன் உள்ளிட்டமுன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து தன் நடிப்புத் திறமையை நிரூபித்தார்.

தொடர்ந்து, தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில்  ஆக்சன் ஹீரோவாக தன் 70 வயதிலும் அசத்தி வரும் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமாகி 46 ஆண்டுகள் ஆகிறது. எனவே இதைச் சிறப்பாகக் கொண்டாட ரஜினி ரசிகர்கள் முடிவெத்துள்ளனர். அதனால் வரும் ஆகஸ்ட் 10 ஆம்தேதி மாலை 6 மணிக்கு 46yearsof rajiniyisam என்ற காமன் டிபிஐ வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்தபடி இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

Festival vibes begin.... #46YearsRajinism #46YearsRajinismCCP

Here is the COMMON COVER PIC for the mega celebration

A @TDT_RajiniEdits members ideation | @imprabhuraj design

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்