38 கட் மற்றும் பேரையும் மாற்றனும்… ஆண்ட்டி இந்தியனுக்கு வந்த சோதனை!

Webdunia
புதன், 19 மே 2021 (16:33 IST)
ப்ளூசட்ட மாறன் இயக்கியுள்ள ஆண்ட்டி இண்டியன் திரைப்படம் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ’ஆண்டி இந்தியன்’ என்ற திரைப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என சென்சார் அதிகாரிகள் கூறியதாக வெளியில் தகவல் வெளிவந்துள்ளது. ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் நரேன், ராதாரவி உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’ஆண்டி இந்தியன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்துவிட்டு சர்ச்சைக்குரிய காட்சிகள் படம் முழுவதும் இருப்பதால் இந்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என்று கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதையடுத்து மறு சென்ஸாருக்காக படத்தை அனுப்பும் முடிவில் படக்குழுவினர் இருக்கின்றனர். இந்நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். இந்நிலையில் ரிவைசிங் கமிட்டியில் படத்தைப் பார்த்தவர்கள் படத்தில் 38 இடங்களில் கட் சொல்லியும், படத்தின் பெயரான ஆண்ட்டி இண்டியன் என்பதை மாற்ற வேண்டும் என சொல்லியும் அப்படி செய்தால் மட்டுமே சான்றிதழ் தரமுடியும் என சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் நீதிமன்றம் செல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்