பொங்கலுக்கு 22 படங்கள்- அதிர வைக்கும் கோலிவுட்!

திங்கள், 10 டிசம்பர் 2018 (11:48 IST)
பெரிய படங்கள் நினைத்த நேரத்தில் வெளியிடுவதால் சிறிய படங்களின் வசூல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.



இது தொடர்பாக சிறிய பட தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டனர். இதனால்  வாரம் தோறும் தணிக்கை செய்யப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கை படங்களை மட்டும் வெளியிட அனுமதி கொடுத்தது. சங்கத்தில் அனுமதி பெறாத படங்களை திரையிட தடையும் விதிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையையொட்டி 52 புதிய படங்களை திரையிட அனுமதி கேட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தை பட அதிபர்கள் வற்புறுத்தினர். இதைத்தொடர்ந்து 2 பண்டிகைகளிலும் எவ்வளவு படங்களை வேண்டுமானாலும் திரையிட்டுக்கொள்ளலாம் என்று சங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
 
இதனால் அதிக எண்ணிக்கையில் படங்கள் திரைக்கு வர உள்ளன. வருகிற 14-ந்தேதி விக்ரம் பிரபு நடித்த துப்பாக்கி முனை, ஜானி, நுங்கம்பாக்கம், தேவகோட்டை காதல், பயங்கரமான ஆளு, புதிய பிரபஞ்சம், துலாம், பிரபு, திரு, ஓடியன், சமுத்திர புத்திரன், ஸ்பைடர்மேன் ஆகிய 11 படங்களை திரைக்கு கொண்டு வர  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
வருகிற 21-ந்தேதி விஜய் சேதுபதியின் சீதக்காதி, ஜெயம் ரவியின் அடங்க மறு, தனுசின் மாரி-2, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜீரோ, கேஜிஎப், அந்தரிக்‌ஷம், படி படி லெச்சே மனசு ஆகிய 9 படங்கள் திரைக்கு வருகின்றன.பொங்கல் பண்டிகையில் பேட்ட, விஸ்வாசம் படம் மட்டுமில்லாமல், 22 படங்கள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
இதனால் தியேட்டர்களை  பிடிப்பதில் இந்த படங்கள் இடையே கடும் போட்டா போட்டி நிலவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்