ஜனவரி மாதத்தில் ரிலிஸுக்கு திட்டம் வகுத்திருந்த தனுஷின் மாரி 2 திரைப்படம் தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறையான டிசம்பர் 21 ஆம் தேதி தனது படத்தை ரிலிஸ் செய்ய முடிவெடுத்து, படத்தின் டிரைலரும் நேற்று வெளியிட்டது. ஜனவரியில் ரஜினியின் பேட்ட திரைப்படமும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் வெளியாவதால் தியேட்டர் கிடைக்காது என்ற காரணத்தால் இந்த திடீர் முடிவு எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முடிவால் ஜெயம் ரவியின் அடங்கமறு, விஜய் சேதுபதியின் சீதக்காதி மற்றும் சிவகார்த்திக்கேயன் தயாரித்துள்ள கனா திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனால் கடுப்பான தயாரிப்பாளர்கள் இதுபற்றி விஷாலிடம் முறையிட்டுள்ளதாகவும் அது சம்மந்த கூட்டம் நேற்று நடைபெற்றது.. கூட்டத்தில் இந்த பிரச்சனைக்கான முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிகிறது.
ஏற்கனவே இதுபோல அனுமதியின்றி தனது படமான திமிரு புடிச்சவன் படத்தை ரிலிஸ் செய்த விஜய் ஆண்டனியின் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்து அவரது படத்திற்கு ரெட்கார்டு போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோல இப்போது தனுஷுக்கும் ரெட் போடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தனுஷின் பின்புலம் மிகவும் பலம் வாய்ந்தது என்பதால் விஷால் என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்தது.
இதையடுத்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது சம்மந்தமாக தயாரிப்பாளர் சங்கம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் டிசம்பர் 21 முதல் ஜனவரி 10 வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டி, பொங்கல் போன்ற பண்டிகைகள் இருப்பதால் தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்கள் படங்களை பண்டிகைக் காலத்திலேயே வெளியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த தேதிகளில் மட்டும் படங்கள் தயாரிப்பாளர்கள் விருப்பப்படியே வெளியிட்டுக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது. இதனால் மாரி 2 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாவதில் உள்ள சிக்கல் தீர்ந்துள்ளது.