விருதுகளை அள்ளிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்..! – கோல்டன் க்ளோப் விருதுகள் பட்டியல்!

திங்கள், 10 ஜனவரி 2022 (10:25 IST)
உலக அளவில் ஆஸ்கருக்கு நிகராக பார்க்கப்படும் மற்றொரு விருது விழாவான கோல்டன் க்ளோப் விருதுகளில் பல்வேறு திரைப்படங்களுக்கு விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

உலக அளவில் நடைபெறும் திரைப்பட விருது விழாக்களில் ஆஸ்கர் விருதுக்கு நிகராக மதிக்கப்படுவது கோல்டன் க்ளோப் விருதுகள். கடந்த ஆண்டில் வெளியான படங்களுக்கு விருதுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளில் ம்யூசிக்கலில் சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை ஆகிய பிரிவுகளில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான வெஸ்ட் சைட் ஸ்டோரி விருதுகளை வென்றுள்ளது.

அதற்கு இணையாக சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட பிரிவுகளில் தி பவர் ஆஃப் டாக் திரைப்படம் விருதுகளை அள்ளியுள்ளது. இதுதவிர பிரபல இணைய தொடரான ஸ்குவிட் கேம் தொடருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. சிறந்த அனிமேஷன் படமாக டிஸ்னியின் என்காண்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர ஜேம்ஸ் பாண்டின் நோ டைம் டூ டை சிறந்த பாடலுக்கும், டூன் படத்திற்காக ஹான்ஸ் சிம்மருக்கு சிறந்த இசைக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்