நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கும் துல்கர் சல்மான்!

செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (16:36 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து அனைத்து மொழிகளிலும் பரீட்சியமான நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் உருவான சீதாராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தெலுங்கில் உருவான இந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி பெற்றது.

சமீபத்தில் அவர் நடிப்பில் கிங் ஆஃப் கோதா திரைப்படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்போது பேன் இந்தியா படங்களில் தொடர்ந்து நடித்து வரும் துல்கர் சல்மான் அடுத்து அட்லியின் உதவி இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் நேரடி தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.

இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்