2வது படத்திற்கு தயாராகும் தோனி என்டர்டெயின்மென்ட்! மீண்டும் தமிழ்ப்படமா?

திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (13:55 IST)
தல தோனி மற்றும் அவரது மனைவி சாக்சி தோனி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய தோனி என்டர்டைன்மென்ட் என்ற திரைப்பட நிறுவனத்தின் சார்பில் எல்.ஜி.எம் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது 
 
இந்த படம் சமீபத்தில் வெளியாகிய எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதும் வசூல் அளவில் இந்த படம் தோல்விதான் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது இரண்டாவது படத்திற்கு தயாராகி உள்ளதாக தெரிகிறது 
 
இதற்காக கதை கேட்கும் பணியில் சாக்சி தோனியை தீவிரமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது 
 
தமிழ் உள்பட தெலுங்கு கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் சாக்சி கதை கேட்டு வருவதாகவும் இரண்டாவது படத்தின் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 
 
இரண்டாவது படத்தையும் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழில் தயாரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்