''சிறப்பான திட்டம்''-முதல்வருக்கு நன்றி கூறிய விஜய் ஆண்டனி

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (21:18 IST)
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், 'இதுபோன்ற திட்டங்களில் தமிழக அரசு கவனம் செலுத்துவதால் நான் மகிழ்கிறேன்'என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு மாணவர்களுக்கு அளிக்கும் திட்டம் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்குவளையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் மற்ற பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தொடங்கி வைத்தனர்.

தமிழகத்தின் அரசுப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வர்லர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய் ஆண்டனி,  தமிழகம் இதுபோன்ற திட்டங்களில் கவனம் செலுத்தி வருவதால் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில், ‘எங்கள் அரசுப் பள்ளி மாணாவர்கள்  தங்கள் வளாகத்தில் சத்தான  காலை உணவைபெறுவார்கள். இதுபோன்ற திட்டங்களில் தமிழக அரசு கவனம் செலுத்துவதால் நான் மகிழ்கிறேன். நம் இளைய மாணவர்கள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு வந்து, பசியின்றி படிப்பார்கள். சிறப்பான திட்டம்’ என்று பதிவிட்டு, ‘முதல்வருக்கு நன்றி’ கூறி பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்