இலங்கையில் தமிழர் பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்கள் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கையில், கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பேசுகையில், போர் முடிவடைந்து 7 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. ஆனால், தமிழர் பகுதிகளில் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், இது குறித்து, இலங்கை ராணுவ வட பிராந்திய தலைவர் மகேஷ் சேனநாயகே செய்தியாளர்களிடம் கூறுகையில், இப்பகுதியில் மீண்டும் தனிநாடு கோரிக்கை எழாமலும், போராட்டம் நடைபெறாமலும் தடுப்பது எனது கடமையாகும். மேலும், வடக்கு மாகாணத்தில் ராணுவம் தொடர்ந்து இருக்கும். ராணுவம் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.