’இலங்கையில் இருந்து இந்தியா வருவோருக்கு இலவச விசா’

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (21:13 IST)
இந்தியாவிற்கு புனித யாத்திரைகளை மேற்கொள்ளும் இலங்கை யாத்திரை செல்வொருக்கான விசா இலவசமாக வழங்குவதற்கு இந்திய அரசு தீர்மானித்துள்ளதாக இலங்கையின் இந்திய உயர் ஆணையர் ஆர்.கே. சிங்கா தெரிவித்துள்ளார்.
 

 
அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஆர்.கே.சிங்கா இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இதன்மூலம் இலங்கை மற்றும் ஏனைய நாடுகளுக்கு இந்தியா மீதான நல்லெண்ணத்தை உருவாக்க உள்ளதாகவும், இந்தியாவின் சுற்றுலா கைத்தொழிலை முன்னேற்றுவதற்கும் இந்திய அரசு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்