ஜிம்பாவே விஸ்வரூபம்: சொந்த நாட்டில் தொடரை இழந்த இலங்கை

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (06:31 IST)
ஜிம்பாவே கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. ஏற்கனவே இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில் தொடரை வெல்லும் முக்கிய போட்டி நேற்று நடைபெற்றது



 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாவே, இலங்கையை பேட்டிங் செய்யும்படி கேட்டுக்கொண்டது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 203 ரன்கள் எடுத்தது
 
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய ஜிம்பாவே 38.1 ஓவர்களில் 204 ரன்கள் எடுத்து தொடரை வென்றது. இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாவே 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது. சொந்த நாட்டில் தொடரை பரிதாபமாக இழந்த இலங்கைக்கு அந்நாட்டு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்