ஆஸ்திரேலியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையே ஆசஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2 வது டெஸ்டின் போது, ஜோப்ரா ஆர்சர் வீசிய பவுன்சரில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் சுமித் தலையை பதம் பார்த்தது. இதில் நிலைகுலைந்த அவர் மைதானத்திலேயே விழுந்தார்.
பின்னர் அவருக்கு பதிலாக டெஸ்ட் வரலாற்றிலேயே முதல் முறையாக மாற்று வீரர் களமிறக்கப்பட்டார். இதுகுறித்து சோயீப் அக்தர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: கிரிக்கெட்டில் பவுன்சர் பந்து வீசுவது சாதாரணம் தான். ஆனால் அப்பந்து பேட்ஸ்மேனை தாக்கினால் சம்பிரதாயத்துக்காக அவரை நலம் விசாரிக்க வேண்டும். சுமித் விவகாரத்தில் ஆர்சர் செய்தது தவறு. சுமித் வலியால் துடித்தபோது ஆர்ச்சர் சென்று பார்த்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.