பாகிஸ்தானில் உண்மையிலேயே தாமரை மலர்ந்ததா?? வைரல் வீடியோவின் பிண்ணனி என்ன?

செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (12:44 IST)
பாகிஸ்தானில் பாஜக கட்சியினரின் கிளை திறக்கப்பட்டுள்ளதாக பரவிய வைரல் வீடியோவின் பிண்ணனி என்ன??

சமீபத்தில் பாகிஸ்தானில் பாஜகவினர் தங்களது கட்சியின் கிளையை ஆரம்பித்துள்ளதாக ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பாஜக கொடியை ஏந்தியவாறு ஒரு கும்பல் கோசம் போடுகின்றனர். மேலும் அது பாகிஸ்தானில் நடப்பதாக குறிப்பிட்டு, ”பாகிஸ்தானில் பாஜக கிளை தொடங்கியுள்ளது, வாழ்த்துகள்” என பலரும் இணையத்தில் அந்த வீடியோவை பகிர்ந்திருந்தனர்.

இது உண்மையா? என ஆராய்ந்ததில் தற்போது உண்மை தகவல் வெளிவந்துள்ளது. அந்த வீடியோ ஜம்மு காஷ்மீரில் ஆனந்த்நாக் தொகுதியில்,  கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலின் போது பாஜக வேட்பாளரான சோஃபி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தபோது எடுத்த வீடியோ என கூறப்படுகிறது. இந்த வீடியோவை மார்ச் மாதம் தனது டிவிட்டர் பக்கத்திலேயே சோஃபி பகிர்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

भाजपा की पाकिस्तान मे पहली शाखा खुल चुकी है । भारत मे तो अक्सर ग़द्दार भारतीय पाकिस्तानी झंडे लहराते रहे है पर आज तबियत ख़ुश हो गई ये दृश्य देखकर । pic.twitter.com/Zg8yfde1Fr

— Atul Kushwaha (@UP_Silk) August 11, 2019

Bar bar Modi sarkar
Har bar Modi Sarkar #PhirEkBaarModiSarkar #LokSabhaElections2019 @narendramodi @PMOIndia @AmitShah @Ramlal @rammadhavbjp @ImAvinashKhanna @RavinderBJPJK @AshokKoul59 @dograjournalist @iamrohit2104 @rpsinghkhalsa @BJP4JnK pic.twitter.com/XLyvptGjLA

— Sofi yousuf (@sofi_yousuf) March 30, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்