தமிழக வீரர்கள் இடம் பெறாத 50 ஓவர் உலகக்கோப்பை அணி! 20 ஆண்டுக்கு பின் இப்போதுதான்..!

புதன், 6 செப்டம்பர் 2023 (14:27 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில் இடம் பெற்ற வீரர்களின் பெயர்கள் வெளியானது என்பதும் தெரிந்ததே. 
 
ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகுர், ஜாஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் சூர்யகுமார் யாதவ்  ஆகியோர் உலகக்கோப்பை விளையாடும் இந்திய அணியில் இடம்பெற்று இருந்தனர்.
 
இந்த நிலையில் 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை விளையாடும் அணியில் தமிழக வீரர்கள் இடம் பெறவில்லை என்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
 
2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் தமிழக வீரருக்கு இடமில்லாமல் இருந்தது. அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு தினேஷ் கார்த்திக், 2011 ஆம் ஆண்டு அஸ்வின், 2015 ஆம் ஆண்டு அஸ்வின், 2019 ஆம் ஆண்டு விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்
 
 இந்த நிலையில் 20 ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் தமிழக வீரர்கள் உலக கோப்பை அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்