இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகள் இடையே டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியதை அடுத்து, இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இதனை அடுத்து, 218 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய மகளிர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஏற்கனவே, முதல் டி20 போட்டியை இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது டி20 போட்டியில் மட்டும் மேற்கிந்திய தீவுகள் அணி வென்ற நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது.