இந்திய கிரிக்கெட் அணி புதிய தொடர்களில் பங்கேற்குமா ?

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (22:34 IST)
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பல கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் லட்சக்கனக்கான உயிரிழப்புகள் முதற்கொண்டு பல்வேறு நாடுகள் பொருளாதார இழப்புகளை சந்தித்துள்ளன.

இந்நிலையில் இந்தியாவில் 5 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இதனால் இந்த  வருடமும் மார்ச் 29 ஆம் தேதி தொடங்கி மே மாதம் வரை நடபெறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இவ்வாண்டு நடைபெறவில்லை.

இத்னால் பெரும் பிசிசிஐ மற்றும் பான்ஸர்சிப்பிற்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் பங்கேற்குமா என பலரும் கேள்விகள் எழுப்பி வந்தனர்.

இதுகுறித்து பிசிசிஐ கூறியுள்ளதாவது :

கொரொனா கட்டுக்குள் வரும் வரை இந்திய சுற்றுப் பயணம் மேற்கொள்ளாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும்,இலங்கை மற்றும் ஜிம்பாவே தொடர்களில் இந்தியா பங்கேற்காது எனவும் விளக்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்