வழக்கம்போல் வெற்றி பெற வேண்டிய ஒரு போட்டியை சிஎஸ்கே அணியின் சொதப்பல் ஆட்டம் காரணமாகத்தான் நேற்று தோல்வி அடைந்தது. நேற்றைய போட்டியில் தவானுக்கு நான்கு முறை கேட்ச் நழுவிடப்பட்டது. முதலாவதாக தீபக் சஹார், இரண்டாவதாக வாட்சன், மூன்றாவதாக தோனி மற்றும் நான்காவதாக அம்பத்தி ராயுடு என நான்கு முறை அவருக்கு கேட்ச் தவறவிடப்பட்டது.
மேலும் நேற்றைய போட்டியில் தோனி முக்கியமான கட்டத்தில் பேட்டிங்கில் களமிறங்கி சொற்ப ரன்களுக்கு அவுட் ஆனது ஒரு கேப்டன் என்ற பொறுப்பை அவர் உணரவில்லை என்பதையே காட்டுகிறது. மேலும் நேற்றைய போட்டியில் வெறும் பீல்டிங் மட்டுமே செய்வதற்கு கேதார் ஜாதவ்வை இறக்க வேண்டுமா? அவருக்கு பதில் ஜெகதீசனை இறக்கியிருக்கலாமே? ஒரு கூடுதல் பேட்ஸ்மேன் கிடைத்திருக்கும்
20 ஆவது ஓவரை வீச பிராவோவுக்கு வாய்ப்பு இருந்தும் அவருக்கு வழங்கவில்லை. அவர் உடல்நலம் தகுதி இல்லாமல் இருப்பதாகவும் அதனால்தான் ஜடேஜாவுக்கு கொடுத்ததாகவும் தோனி பேட்டியில் கூறியிருந்தார். இருப்பினும் தீபக் சஹாருக்கு ஒரு ஓவர் மீதம் வைத்திருந்ததால் அந்த இருபதாவது வரை சமாளித்து இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் நேற்றைய தோனியின் கேப்டன்சி மிஸ்ஸிங் மற்றும் மோசமான பீல்டிங் ஆகியவை காரணமாகவே சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது