மைதானத்தில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள்!

சனி, 3 ஜூலை 2021 (11:45 IST)
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

வெஸ்ட் இண்டீஸின் ஆண்ட்டிகுவாவில் பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி டி 20 போட்டியில் விளையாடியது. அப்போது களத்தில் பீல்ட் செய்த போது வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் சினெல் ஹென்றி மற்றும் செடியன் நேஷன் ஆகியவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். அதையடுத்து அவர்கள் ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு தேறி வருகின்றனர். ஆனால் அவர்களின் மயக்கத்திற்கான காரணம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்