ஆகாஷ் தீப் செய்த அற்புத சாதனை.. 49 ஆண்டு கால சாதனை முறியடிப்பு.. குவியும் வாழ்த்துக்கள்..!

Siva

திங்கள், 7 ஜூலை 2025 (07:14 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இந்தியாவின் பந்துவீச்சாளராக நேற்று ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ள ஆகாஷ் தீப்புக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப் முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் 20 ஓவர்கள் பந்து வீசி 88 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு மெய்டன் ஓவர்களை வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் ஆகாஷ் தீப் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 21 ஓவர்கள் பந்து வீசி 99 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு மெய்டன்களை வீசியும் அவர் இந்த விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகள் என மொத்தம் பத்து விக்கெட்டுகள் எடுத்தாலும், அவர் இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு முக்கிய சாதனையை படைத்துள்ளார். அதாவது, இங்கிலாந்து அணியின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களில் நான்கு பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்கியது ஆகாஷ் தீப் என்ற ஒரே பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதற்கு முன், இங்கிலாந்து அணியின் முதல் நான்கு விக்கெட்டுகளை மேற்கிந்திய தீவுகளின் மைக்கேல் ஹோல்டிங் 1976 ஆம் ஆண்டு வீழ்த்திய நிலையில், 49 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்து அணியின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களில் நான்கு பேரை அவுட் ஆக்கிய பெருமைக்குரியவர் ஆகாஷ் தீப் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இங்கிலாந்து அணியின் பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக் மற்றும் ஆலி போப் ஆகிய நான்கு விக்கெட்டுகளையும் நேற்றைய இரண்டாவது இன்னிங்ஸில் அவர் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்