தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை, இரண்டாம் உலகம் உள்ளிட்ட படங்களில் தனுஷ், செல்வராகவன் இணைந்து பணியாற்றினர். இன்றளவும் இப்படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் புதுப்பேட்டை. இப்படத்தை செல்வராகவன் இயக்கினார். இப்படத்தின் தனுஷ் கொக்கி குமார் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில்,இப்படம் வெளியாகி இன்றுடம் 15 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், இப்படத்தின் கொக்கிகுமார் காதாப்பத்திரம் பற்றி ரசிகர்கள் கொண்டாடி டிரெண்டிங் உருவாக்கினர்.
அடுத்து, செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கவுள்ள படத்திற்கு நானே வருவேன் என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்திற்கு எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தன் ரசிகர்களுக்கு ஒரு பதிவிட்டுள்ள்ளார். அதில், நான் அங்கே இருந்தால் நிம்மதியாய் இருப்பேன் , இங்கே இருந்தால் நிம்மதியாய் இருப்பேன் என்று ஒரு போதும் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள் ! அது வெறும் மாயை ! வாழ்க்கையை முற்றிலும் கெடுத்து விடும் ! இருக்கும் இடமே நிம்மதி ! சொர்க்கம் ! கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் புரியும் எனத் தெரிவித்துள்ளார்.