மீண்டும் ஐபிஎல் போட்டியை ஸ்பான்ஸர் செய்கிறது விவோ!

வியாழன், 18 பிப்ரவரி 2021 (08:11 IST)
மீண்டும் ஐபிஎல் போட்டியை ஸ்பான்ஸர் செய்கிறது விவோ!
கடந்த ஆண்டு லடாக் பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து சீனாவின் நிறுவனமான விவோ ஐபிஎல் போட்டியை ஸ்பான்சர் செய்வதில் இருந்து நீக்கப்பட்டது
 
இந்த நிலையில் இந்த ஆண்டு அதாவது 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடராக மீண்டும் சீனாவின் விவோ செல்போன் நிறுவனம் ஸ்பான்சர் செய்ய  உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் அடுத்து ஐபிஎல் ஸ்பான்சரிலிருந்து விவோ நிறுவனம் நீக்கப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் மீண்டும் அதே நிறுவனம் ஐபிஎல் போட்டியை ஸ்பான்சர் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஐபில் போட்டியில் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஏலம் குறித்த பதிவில் விவோ ஐபிஎல் என குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியை விவோ நிறுவனம்தான் செய்ய உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டிக்டாக், ஹலோ உள்பட 100க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்களுக்கு எல்லாம் தடை தொடரும் நிலையில் விவோ நிறுவனத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்