கோஹ்லி அஸ்வினிடம் பேச வேண்டும்: கங்குலி

புதன், 5 செப்டம்பர் 2018 (17:39 IST)
அஸ்வின் பந்துவீச்சு தொடர்பாக அவரிடம் கேப்டன் விராட் கோஹ்லி பேச வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

 
இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடரை மட்டும் வென்று ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை இழந்தது. பெரிது எதிர்பார்க்கப்பட்ட டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.
 
இதனால் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் தோல்வி குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால், தொடர் தோல்வி குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
 
இந்நிலையில் கங்குலி, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் குறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
மொயின் அலியை விட அஸ்வின் இரண்டு மடங்கு சிறந்த பந்துவீச்சாளர். ஆனால் மொயின் அலி சாதரணமாக வீசுகிறார். அஸ்வின் ஓவரின் 6 பந்துகளையும் 6 விதமாக வீசுகிறார். 
 
அவர் புதுவிதமான சோதனை செய்கிறார். விராட் கோஹ்லி, அஸ்வினிடம் பேச வேண்டும். ஏன் அஸ்வின் பொறுமையாக இருக்கிறார் என்று கேட்க வேண்டும். வெளிநாடுகளில் கடினமான திட்டுகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்