3 வருடங்களுக்கு பின் செஞ்சுரி அடித்த விராத் கோஹ்லி: குவியும் வாழ்த்துக்கள்!

வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (08:02 IST)
மூன்று வருடங்களுக்கு பின்னர் விராட் கோலி நேற்று செஞ்சுரி அடித்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
சரியாக 1020 நாட்களுக்கு பின்னர் விராட் கோலி நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்தார். அவரது அதிவேக சதம் காரணமாக நேற்று இந்திய அணி மிக அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில ஆண்டுகளாக மோசமான பேட்டிங் பார்மில் இருந்த விராட் கோலி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் அவர் அதிரடியாக பவுண்டரி சிக்சர்கள் அடித்து செஞ்சுரி அடித்தார். அவரது செஞ்சுரிருக்கு அணியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் நேற்றைய போட்டியில் அவர் செஞ்சுரி அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 3500 ரன்கள் கடந்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்