இந்திய அணியில் வருண் சக்கரவர்த்திக்கு இடம் கிடைக்கும்: விராத் கோஹ்லி

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (08:50 IST)
வரும் உலக கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியில் வருண் சக்கரவர்த்திக்கு இடம் கிடைக்கும் என்றும் அவர் இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருப்பார் என்றும் விராட் கோலி கூறியுள்ளார்
 
நேற்று நடைபெற்ற பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் வருண் சக்கரவர்த்தியின் அபார பந்து வீச்சு காரணமாக பெங்களூரு அணி படுதோல்வி அடைந்தது
 
வருண்  சக்கரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் அது மட்டுமின்றி அவர் வீசிய 24 பந்துகளில் 15 டாட் பந்துகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது
 
இந்த நிலையில் வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சு அபாரமாக இருந்ததாகவும் இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் இந்திய அணியின் முக்கிய துருப்பு சீட்டாக இருப்பார் என்றும் விராத் கோலி தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்