ஐபிஎல் போட்டியில் மேலும் இரண்டு அணிகள்!

ஞாயிறு, 14 ஜூலை 2019 (18:03 IST)
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி திருவிழா பெரும் வரவேற்புடன் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்றபோது ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது
 
இந்த நிலையில் 2020ஆம் ஆண்டில் இருந்து தற்போது எட்டு அணியாக இருக்கும் ஐபிஎல் தொடர் மேலும் இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு பத்து அணியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஞ்சி, அகமதாபாத் மற்றும் கோவா ஆகிய மூன்று அணிகள் ஐபிஎல் போட்டியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இவற்றில் இரண்டு அணிகள் சேர்த்து கொள்ளப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
ஏற்கனவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை, சென்னை, டெல்லி, ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் இருக்கும் நிலையில்  ராஞ்சி, அகமதாபாத் மற்றும் கோவா ஆகிய மூன்று இரண்டு அணிகள் இணையவுள்ளது. ராஞ்சி அணி உருவானால் அது தோனியின் சொந்த மாநில அணியாக இருந்தாலும் அவர் சென்னை அணிக்கே ஓய்வு பெறும்வரை விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்