ரியோ ஒலிம்பிக்கில் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் மேற்கொண்டு இரண்டு தங்கம் பெற்றால், மூன்று ஒலிம்பிக்கில் தொடர்ந்து தடகளத்தின் மூன்று பிரிவிலும் தங்கம் வென்ற ஒரே வீரர் என்ற அழியா புகழுக்கு சொந்தக்காரர் ஆகி விடுவார்.
மேலும், இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் தடகளப் போட்டியில் மூன்று பிரிவிலும், அதாவது 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டம் என மூன்று போட்டிகளில் மூன்று முறை தொடர்ச்சியாக தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்புக்கு நெருக்கமாக கொண்டு வந்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடத்தில் கூறிய உசைன் போல்ட், “சில பேர் என்னால் அழியாத புகழை பெற முடியும் கூறுகிறார்கள். ஆனால், அதற்கு இன்னும் இரண்டு தங்கப்பதக்கங்களை வெல்ல வேண்டியுள்ளது. 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் இனிமையாக இருக்கப்போகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.