டோக்கியோ ஒலிம்பிக்; அயர்லாந்து அணியை வீழ்த்திய இந்திய பெண்கள் ஹாக்கி அணி!

வெள்ளி, 30 ஜூலை 2021 (11:14 IST)
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 4வது சுற்றில் வென்றுள்ளது.

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்

இந்நிலையில் இன்று நடந்த ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி போட்டியின் 4வது சுற்றில் அயர்லாந்து அணியை எதிர்கொண்ட இந்திய பெண்கள் ஹாக்கி அணி 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. அடுத்த சுற்றிலும் இந்தியா வென்றால் காலிறுதிக்கு தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்