இந்தியாவுக்கு தங்கம் கிடைக்குமா? இறுதி போட்டிக்குள் கமல்பிரீத் கவுல்!

சனி, 31 ஜூலை 2021 (08:46 IST)
டோக்கியோ ஒலிம்பிக் வட்டு எறிதல் கமல்பிரீத் கவுல் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. 

 
கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்று போட்டியில் பங்கேற்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
 
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் வட்டு எறிதல் மகளிர் பிரிவில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். தகுதிச்சுற்றில் அதிகபட்சமாக 64 மீட்டர் தூரத்திற்கு வட்டெறிந்து கமல்பிரீத் கவுர் இறுதிக்கு முன்னேறினார். 
 
இதனிடையே ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறும் மகளிருக்கான வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இவர் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்