மின் கழிவுகளில் இருந்து டோக்கியோ ஒலிம்பிக் பதக்கங்கள்!!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (12:22 IST)
மின் கழிவுகளில் இருந்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலத்தை பிரித்தெடுத்து அதை கொண்டு பதக்கத்தை தயாரித்துள்ளது ஜப்பான். 

 
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் சுமார் 10,305 வீரர்களும், வீராங்கனைகளும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். மொத்தம் 33 விதமான விளையாட்டுகளில் 339 ஈவெண்டுகள் நடைபெற்று வருகின்றன.
 
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் ஒலிம்பிக் விளையாட்டின் மரபுப்படி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பதக்கம் உருவாக்கத்தில் புதுமை படைத்துள்ள ஜப்பான். 
 
ஆம், பேரண்டத்தையே தற்போது பீதியில் ஆழ்த்தியுள்ள மின் கழிவுகளில் இருந்து இந்த பதக்கங்கள் செய்யப்பட்டுள்ளதாம். அதாவது மின் கழிவுகளில் இருந்து தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலத்தை பிரித்தெடுத்து அதை கொண்டு பதக்கத்தை தயாரித்துள்ளது ஜப்பான். 
 
இதற்காக 2017 வாக்கில் மின் கழிவுகளை சேகரிக்கும் நோக்கில் Tokyo 2020 Medal Project என்ற திட்டத்தை அமல்படுத்தி 32 கிலோ தங்கம், 3500 கிலோ வெள்ளி மற்றும் 2200 கிலோ சேகரிக்கப்பட்டு பதக்கம் தயாரிக்கப்பட்டு வீரர்களுக்கு வழங்க்கப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்